: En Peria Athai Pankajam…
Articles
x
(Written by Vasanta Rajagopalan)
அந்த நாள் ஞாபகம் வருதே !
அன்று கோடை வெய்யில்
எல்லோரும் பாட்டியை சுற்றி
அந்த காலத்திலே ….
பாட்டி நினைவு பின்னோக்கி ….
பாட்டி
தன் பிரசவங்கள்
பற்றி எங்களுடன்
பேசிக் கொண்டிருந்தாள்..
அனுமதி மறுக்கப்பட்ட
பிரதேசம் அது.
ஒரு சித்தப்பா கேட்டார் .
எனக்கும் என் தங்கச்சி தம்பிகளுக்கும்
நடுவுல ஒருத்தி இருந்தாளாம்மா. ?.
கடந்த காலம் குடியேறியது..
பாட்டியின் முகம்
நசுங்கியது..
” பொறந்தப்ப தலை நிறைய முடி ,
அவ்வளோ அழகு அவ..”..
“என் சாயலா? ”
என்று கேட்ட சின்ன அத்தை
முகம் சற்று சிவந்தது.
” ஹும்ம்…..! பாட்டி பெருமூச்சு
சின்ன அத்தை முகத்தில் வாட்டம்
சித்தப்பாக்களின் கண்களில் கலக்கம்
“யாரைப் போல இருப்பா”,
‘பாட்டி , என்னாச்சு அவளுக்கு’
‘எந்த வயசுல போனா..’
பாட்டி .. துவண்டு
சித்தப்பா மடியில் படுத்தாள்..
மறைந்து போனவள்
அந்த நிமிஷம்
எங்கள் எதிரே வந்து நின்றாள்..
மானசீகமாய்…..நிழலாக….
ஆம்
அவள் தான் என் அத்தை பங்கஜம்